சின்னசேலம் அருகே விபத்துகளை தடுக்க சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு


சின்னசேலம் அருகே விபத்துகளை தடுக்க  சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு
x

சின்னசேலம் அருகே விபத்துகளை தடுக்க சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராம எல்லையில் செல்லும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கு விபத்துகள் நடப்பதை தடுப்பது மற்றும் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சதீஷ் ஆகியோர் அம்மையகரம் பகுதி சாலையில் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், அம்மையகரம் பகுதியில் விபத்துகள் நடப்பதை தடுக்க உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதோடு, சாலையின் நடுவில் வண்ண விளக்குகள் பதித்து, சாலையை விரிவு படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.


Next Story