இடைத்தேர்தலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்யும் அலுவலர்கள்


இடைத்தேர்தலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்யும் அலுவலர்கள்
x

அலுவலர்கள்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்தநிலையில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுவதற்கு தேவையான பொருட்களை தயார் செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஒவ்வொரு பொருட்களையும் தனியாக பிரித்து, வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் மூட்டையாக கட்டி வைக்கும் பணி நடந்து வருகிறது.


Next Story