வீரசோழன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாரி ஆய்வு
வீரசோழன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர்
காரியாபட்டி,
நரிக்குடி வட்டாரம் வீரசோழன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் யசோதாமணி, நரிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் முகமது நிசார் மற்றும் வீரசோழன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அருண்குமார் ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர். ஆய்வின்போது மருந்து கையிருப்பு, பராமரிப்பு பற்றி துணை இயக்குனர் கூறினார். மேலும் மருத்துவமனையின் தரம் பற்றி மக்களிடம் கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story