வேளாண்மை பணிகளை அதிகாரி ஆய்வு


வேளாண்மை பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே வேளாண்மை பணிகளை அதிகாரி ஆய்வு செய்தனா்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி;

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் மத்திய, மாநில அரசு சார்பில் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா ஆய்வு மேற்கொண்டார். அந்தவகையில் ரங்கநாதபுரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.4½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உலர் களம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட பணி, கரும்பில் ஊடுபயிராக உளுந்து பயிரிடப்படிருந்ததையும், மணிலா பயிர் அறுவடை பணியையும் அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மலர்வண்ணன், வேளாண்மை அலுவலர் சசிக்குமார், உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story