வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
x

வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

அரியலூர்

ஆண்டிமடம்:

ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அணிக்குதிச்சான் ஊராட்சியில் பூவாணிப்பட்டு பெரியஏரி மேற்குப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு (சங்கன்பாண்டு) பணிகள், நாகம்பந்தல் ஊராட்சியில் அங்கன்வாடி, கழிப்பறை கட்டும் பணி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நாகம்பந்தல் மெயின்ரோட்டில் பஸ் நிறுத்தம் கட்டும் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Next Story