அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர்
வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில்குமார், மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்லுாரி இயக்குனர் சாந்திமலர், கூடுதல் இயக்குனர் ஜெரால்டு மரியசெல்வம் ஆகியோர் நேற்று திடீரென அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருத்துவமனையில் உள்ள வார்டுகள், அவசர சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் பராமரிக்கப்படும் ரெக்கார்டுகளை பார்வையிட்டனர். பின்னர், மருத்துவமனைக்கு தேவையான வசதிகள், கட்டமைப்புகள் உள்பட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின் போது, மருத்துவமனை டீன் திருமால் பாபு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story