இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்ட வாழைகளை அதிகாரிகள் ஆய்வு


இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்ட வாழைகளை அதிகாரிகள் ஆய்வு
x

திருக்குறுங்குடியில் இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்ட வாழைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்த பல லட்சம் வாழைகள் இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. இலை கருகல் நோயினால் வாழைத்தார்கள் திரட்சியாக இருக்காது என்றும், மகசூல் பாதிக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நேற்று முன்தினம் 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக களக்காடு தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சண்முகநாதன், தோட்டக்கலை துறை அதிகாரி இசக்கிமுத்து ஆகியோர் திருக்குறுங்குடியில் இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்ட வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) நோய் தடுப்பு நிபுணர் குழு மூலம் சோதனை நடத்தப்படும் என்றும், விவசாயிகளிடமும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story