அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பந்தலூர்
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே படச்சேரி, முருக்கம்பாடி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இங்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்த குறை தீர்ப்பு முகாம் நடைப்பெற்றது. மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினநலஅலுவலர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பந்தலூர் தாசில்தார் நடேசன் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அமுதா, திருஞானசம்பந்தம், வட்டவழங்கல் அலுவலர் மகேந்திரகுமார், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், சாலை, நடைப்பாதை, தெருவிளக்கு, முதியோர் உதவிதொகை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.