நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் அதிகாரிகள் ஆய்வு


நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் அதிகாரிகள் ஆய்வு
x

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் கிழக்கு பகுதி வழியாக திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய மதுரை மண்டல அலுவலர் விபவ்மிட்டல் ஆய்வு செய்தார். அதேபோல நில எடுப்பு பணி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் நாகராஜ், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, நில எடுப்பு தனி வட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர். அப்போது ராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட முதுகுடி, தெற்கு வெங்காநல்லூர், மேலராஜகுலராமன் ஆகிய பகுதிகளில் சாலை, மேம்பாலம் அமைக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். அதேபோல எஸ். ராமலிங்கபுரம் அருகே ரெயில்வே மேம்பால அமைய உள்ள இடத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story