மின் இணைப்புகளை அதிகாரிகள் ஆய்வு
மின் இணைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விதிமீறல் காணப்பட்ட மின்இணைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்தோறும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய பகுதிகளில் மின்விதிமீறல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி புளியங்குடி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய செயற்பொறியாளர் பிரேமலதா தலைமையில், 4 உதவி செயற்பொறியாளர்கள், 11 உதவி பொறியாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவப்படை மூலம் மின் இணைப்புகுறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் சுமார் 1,115 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டதில், 3 மின் இணைப்புகள் விதிமீறல் கண்டறியப்பட்டு உடனடியாக அவர்களுக்கு ரூ.68,500 அபதாரம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story