மின்பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு


சாத்தான்குளம் பகுதியில் மின்பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம் திருச்செந்தூர் கோட்டம் சாத்தான்குளம் உபகோட்டத்துக்கு உட்பட்ட பண்டாரபுரம், விஜயராமபுரம் பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்க மெகா பராமரிப்பு பணி நடந்தது. அதாவது பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றுதல், உயர்அழுத்த மின்பாதையில் பீங்கான் இன்சுலேட்டர்களுககு பதிலாக பாலிமர் இன்சுலேட்டர் பொருத்துதல், தொய்வாக உள்ள மின்பாதைகளை சீரமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நடந்தன. இந்த பணிகளையும், காயாமொழியில் புதிதாக அமைய உள்ள உபமின் நிலையத்திற்கான இடத்தையும் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் (பொது) ரெமோனா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்,

திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் ரவீந்திரகுமார், ராம்மோகன், முத்துகிருஷ்ணன், பேச்சிமுத்து, உதவி பொறியாளர்கள் எட்வர்ட் ஜெயபாலன், சுஜா, முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story