பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு


பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு
x

பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தீயணைப்பு அலுவலர், தனி வட்டாட்சியர், தொழிலக பாதுகாப்பு சுகாதாரத்துறை அலுவலர், போலீசார் ஆகிய 4 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை ஆகிய பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடத்தப் போவது முன்கூட்டியே தெரிந்து பட்டாசு ஆலைகளை குத்தகை எடுத்த உரிமையாளர்கள் ஒரு சில பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடுத்துள்ளனர். இதனால் ஆய்வு குழுவினர் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.Related Tags :
Next Story