பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகத்தை அதிகாரி ஆய்வு
திருப்பத்தூர் பகுதிகளில் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகத்தை அதிகாரி ஆய்வு செய்தார்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொங்கல்தொகுப்பு வாங்க கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு ஒரு நாளைக்கு 200 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் வீடு வீடாக ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதி, திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் டோக்கன் வழங்கும்பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வீட்டில் இருந்தவர்களிடம் வழங்கப்பட்ட டோக்கனை வாங்கி தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்தார். மேலும் ரேஷன் கடை விற்பனையாளர் பார்த்தசாரதியிடம் இதுவரை எத்தனை டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என கேட்டறிந்தார். திருப்பத்தூர் வட்ட வழங்க அலுவலர் திருமலை உடன் இருந்தார்.