பாலூர்-குறிஞ்சிப்பாடி சாலையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைய உள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
பாலூர்-குறிஞ்சிப்பாடி சாலையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைய உள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பண்ருட்டி,
கடலூர் அடுத்த பாலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையின் இடையே உள்ள கெடிலம் ஆற்று தரைப்பாலத்தில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதனால் ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் கெடிலம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ள இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக நபார்டு வங்கி நிதி உதவியுடன் அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக கடலூர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் கரு.நாகராஜன், உதவி கோட்ட நெடுஞ்சாலை பொறியாளர் சூரியமூர்த்தி, உதவி பொறியாளர் பாலாஜி ஆகியோர் புதிதாக உயர்மட்ட பாலம் அமைய உள்ள இடத்தில் இருக்கும் தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.