மேம்பாலம் கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு


மேம்பாலம் கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு
x

பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் மற்றும் சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு ெசய்தனர்.

வேலூர்

அதிகாரிகள் ஆய்வு

காட்பாடி தாலுகா பொன்னை ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டுப்பணி நடைபெற்று வருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல் திருவலம் பேரூராட்சியில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஆற்று நீர் பாசன சிறிய பாலம் இடிக்கப்பட்டு போக்குவரத்து வசதிக்காக பெரிய பாலமாக அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் தரம் மற்றும் சரியான அளவில் கட்டப்பட்டுள்ளதா எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சாலை பணிகள்

பின்னர் வள்ளிமலை அருகே உள்ள கொக்கேரி ராமாபுரம், அம்மார்பள்ளி, பெரியமிட்டூர் மகிமண்டலம் உள்ளிட்ட பகுதிகலில் புதியதாக போடப்பட்ட தார் சாலைகள் தரமாகவும், சரியான அளவிலும் அமைத்து உள்ளார்களா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் தனசேகரன், காட்பாடி உட்கோட்ட பொறியாளர் சுகந்தி மற்றும் வேலூர் தர கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் பூவரசன், அசோக்குமார் மற்றும் சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story