பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்
சென்னங்குப்பத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சு.தயாளன் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் பா.சுமதி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர் என்.ஜி.சிவக்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் வட்டாரத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாணவர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளிகளில் சுற்றுப்புற சுகாதாரம், பள்ளி செல்லாக் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பணியைக் குழு அமைத்துக் கண்காணித்தல், பள்ளிப் பதிவேடுகளில் மாணவர்களின் தகவல்களை உடனுக்குடன் பதிவு செய்தல் போன்றவை குறித்து அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒருங்கிணைத்தனர். ஒருங்கிணைப்பாளர் டி.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.