புன்னம் பகுதியில் உள்ள கால்வாய்களை அதிகாரிகள் திடீர் ஆய்வு


புன்னம் பகுதியில் உள்ள கால்வாய்களை அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

புன்னம் பகுதியில் உள்ள கால்வாய்களை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

கரூர்

புன்னம் ஊராட்சி பகுதியில் உள்ள ஓடைகள், அரசு மற்றும் தனியார் நிலங்கள் வழியாக செல்லும் உபரி நீர் கால்வாய்கள், புகளூர் காகித ஆலையில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் மற்றும் புகளூர் காகித ஆலையில் இருந்து கழிவுநீர் வெளியேறும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கரூர் கோட்டாட்சியர் ரூபினா தலைமையில் புகழூர் தாசில்தார் மோகன்ராஜ், மண்டல துணைத் தாசில்தார் அன்பழகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், வரும் மழை காலங்களில் மழை நீரும், கழிவு நீரும் செல்லும்போது தங்கு தடை இன்றி செல்வதற்கு உண்டான வழிவகை செய்யப்பட்டுள்ளதா?, செய்யப்படாத பகுதிகளை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், உடனடி நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்றும் அதற்குரிய திட்ட அறிக்கை தயார் செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர் திட்ட அறிக்கை தயார் செய்தவுடன் கழிவுநீர் கால்வாய் ஆடைக்கால்வாய் மற்றும் பல்வேறு நீர்நிலைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியை தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story