விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

அரியலூர்

அரியலூர்:

திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு தரமான விதைகளை உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய சென்னை விதை சான்று இயக்குனர் சுப்பையாவின் உத்தரவின்பேரில் 2 நாட்கள் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 25 தனியார் விதை விற்பனை நிலையங்கள், 7 அரசு விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் கே.பி.முருகேசன் தலைமையில் திருச்சி, அரியலூர் மற்றும் மதுரை மாவட்ட விதை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நடத்திய இந்த ஆய்வின்போது, விதை உரிம விவரங்கள், விதை இருப்பு, கொள்முதல் செய்த விதைகளின் விவரங்கள், விலைப்பட்டியல், விதைகளின் முளைப்பு திறன் அறிக்கை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக 20 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆய்வில் விதை சட்ட விதிகளை மீறியது தொடர்பாக ரூ.10¼ லட்சம் மதிப்புள்ள 3.79 டன் விதை நெல் மற்றும் இதர விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்ேபாது, திருச்சி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் ம.கோவிந்தராசு மற்றும் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.


Next Story