வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு


வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x

கடையம் பகுதியில் வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தென்காசி

கடையம்:

கடையம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை தென்காசி மாவட்ட மண்டல அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குனருமான அருள்நங்கை மற்றும் தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய - மாநில திட்டங்கள்) நல்லமுத்துராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் மேற்படி திட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை மூலம் சேர்வைகாரன்பட்டி, ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் கள ஆய்வு செய்தனர். 2021-2022-ம் ஆண்டு பொட்டல்புதூர் ஊராட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட தென்னங்கன்றுகள், மின்கல விசை தெளிப்பான், நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி, தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா, துணை வேளாண்மை அலுவலர் சுப்ராம், வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, பேச்சியப்பன், பால்துரை, தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் திருமலைக்குமார், பானுமதி, இசக்கியம்மாள், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர், உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story