நவீன மின் மயானம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
கெங்கநல்லூர், கருங்காலி கிராமங்களில் நவீன மின் மயானம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர்
அணைக்கட்டு தாலுகவுக்கு உட்பட்ட கருங்காலி மற்றும் கெங்கநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் புதிதாக நவீன மின் மயானம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்ய வருவாய்த் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அரசுக்கு சொந்தமான இடங்களை நேற்று தாசில்தார் வேண்டா, வருவாய் ஆய்வாளர் ரேவதி, சர்வேயர்களுடன் ஆய்வு செய்தார். அப்போது அந்த இடத்தின் வகைப்பாடு, அங்கு மயானம் அமைப்பதற்கு தேவைப்படும் இடம் உள்ளதா, இந்த பகுதியில் மின் மயானம் அமைத்தால் அருகில் உள்ள மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து பொதுமக்களிடத்திலும் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து கெங்கநல்லூர், கருங்காலி ஆகிய இரண்டு இடங்களிலும் ஆய்வு செய்தது குறித்த அறிக்கையை கிராமநிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் சமர்ப்பிக்க தாசில்தார் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story