உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் காந்திநகர், திருச்சுழி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அறிவுறுத்தலின்படி அருப்புக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முகமது இஸ்மாயில் காசிம் தலைமையில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் இணைந்து 11 உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது ஒரு சில உணவகங்களில் அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட இறைச்சிகள், கெட்டுப்போன கோழி மற்றும் மீன் இறைச்சிகள் என 23 கிலோ இறைச்சி உணவு பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கெட்டுப்போன உணவு பொருட்கள் வைத்திருந்த 7 உணவகங்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. கெட்டுப்போன உணவு பொருட்களை பயன்படுத்தினால் உணவகங்களுக்கு சீல் வைக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


Related Tags :
Next Story