மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்ற அதிகாரிகள்


மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்ற அதிகாரிகள்
x

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களை மாலை அணிவித்து அதிகாரிகள் வரவேற்றனர்.

வேலூர்

கணியம்பாடி ஊராட்சியில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி அதிகாரிகள் விழிப்புணர்வு வாகனம் மூலம் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் செல்விரவி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சண்முகானந்தபாபு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) தூயவன், ஆசிரியர் பயிற்றுனர் பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார்.

இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கணியம்பாடி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கணியம்பாடி என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த 3 மாணவர்கள் இந்த அரசு பள்ளியில் சேர்க்க அவரது பெற்றோர்கள் அழைத்து வந்தனர். அந்த மாணவர்களுக்கு அதிகாரிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.


Next Story