ஒலகடம் அரசு மேல்நிலைப்பள்ளி புதுப்பிப்பு:ஸ்பேக் நிறுவனத்துக்கு பாராட்டு
ஸ்பேக் நிறுவனத்துக்கு பாராட்டு
அம்மாபேட்டை அருகே ஒலகடம்-பவானி செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஒலகடத்தைச் சுற்றியுள்ள தாண்டாம்பாளையம், தாளபாளையம், அம்மன்பாளையம், மயிலம்பாடி, மூன்ரோடு, நால் ரோடு, பூனாச்சி, ஒட்டபாளையம், குந்துபாயூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கூடமானது நீண்ட காலமாக சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்கள் வர்ணம் பூசாமல் பொலிவிழந்து காணப்பட்டது.
இதனையடுத்து பள்ளிக்கூட நிர்வாகம் கேட்டு் கொண்டதன் பேரில், பூனாச்சி ஸ்பேக் ஸ்டார்ச் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் பள்ளிக்கூடம் முழுவதும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் செய்து பின்னர் வர்ணம் பூசி புதுப்பித்து கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு பள்ளிக்கூடம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் ஸ்பேக் நிறுவனத்தின் முதன்மை இயக்குதல் அதிகாரி இ.வெற்றிவேல், அசோசியேட் வைஸ் பிரசிடெண்ட் எஸ்.பாலமுருகன், பொது மேலாளர் பி.சண்முகசுந்தரம், மனிதவள மேம்பாட்டு அதிகாரி சி.ராஜசிதம்பரம், உதவி மேலாளர் பி.பெருமாள், சிவில் என்ஜினீயர் கே.ராஜா ஆகியோருக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சாந்தி சால்வை அணிவித்தார். பின்னர் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.