ஓலை பிடாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு


ஓலை பிடாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
x

இலுப்பூர் அருகே ஓலை பிடாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் உண்டியலில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றனர்.

புதுக்கோட்டை

ஓலை பிடாரியம்மன் கோவில்

இலுப்பூர் அருகே உள்ள புங்கினிப்பட்டி ஜீவாநகரில் ஓலை பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்தகோவில் இலுப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களுக்கு குலதெய்வமாகவும், கிராம தெய்வமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம ஆசாமிகள் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியலை தூக்கி சென்று கோவிலின் வெளிபுறத்தில் வைத்து உடைத்தனர். பின்னர் அதிலிருந்து பணத்தை திருடி சென்று விட்டனர்.

நேற்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள் கோவில் கதவு உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story