ஓலப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா


ஓலப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா
x

ஓலப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடந்தது.

கரூர்

நொய்யல்,

வேட்டமங்கலம் ஊராட்சி ஓலப்பாளையத்தில் கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நடைபெற்றது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கருப்பண்ணசாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் பெண்கள் பொங்கல் மற்றும் மாளவிளக்கு வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story