அலங்கார பொருட்களாக மாறிய பழைய சைக்கிள்


அலங்கார பொருட்களாக மாறிய   பழைய சைக்கிள்
x

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழைய சைக்கிள் உதிரிபாகங்கள் அலங்கார பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழைய சைக்கிள் உதிரிபாகங்கள் அலங்கார பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

கோட்டார் ஆயுர்வேத ஆஸ்பத்திரி

நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்வார்கள். மேலும் மருத்துவக்கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகளும் மருத்துவப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எப்போதும் ஆயுர்வேத மருத்துவமனை பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் உணவகம் ஒன்று தொடங்கப்பட்டது. உணவகத்தில் பல்வேறு கண்கவர் அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக பழைய சைக்கிளின் உதிரிபாகங்கள், பழுதான மின்சாதானங்கள், பழைய பிளாஸ்டிக் உள்ளிட்டவைகள் வைத்து பலவிதமான அலங்கார பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அலங்கார பொருட்கள் தயாரிப்பு

அதாவது பழைய சைக்கிள் ஒன்றில் பலகை வைத்து உருவாக்கப்பட்ட மேஜை, சைக்கள் டயரில் உள்ள ரிம்களை வைத்து தயாரிக்கப்பட்ட மேஜை, சைக்கிள் கூடைகள் சுவரில் பதிக்கப்பட்டு அதில் செடிகள் வளர்ப்பது, வீடுகளில் பயன்படுத்திய பழைய பெரிய தண்ணீர் கேன்களில் உருவாக்கப்பட்ட பறவைக்கூடுகள், பழுதான மின்விசிறியில் மின்விளக்குகளை தொங்கவிடுவது உள்ளிட்ட பல்வேறு அலங்கார பொருட்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.இதனை ஆஸ்பத்திரிக்கு வரும் நபர்கள் பார்த்து ரசித்தபடி செல்கிறார்கள்.


Next Story