மெலட்டூரில், 500 ஆண்டு பழமையான பாகவத மேளா நாடக விழா


மெலட்டூரில், 500 ஆண்டு பழமையான பாகவத மேளா நாடக விழா
x

மெலட்டூரில் 500 ஆண்டு பழமையான பாகவத மேளா நாடக விழா பிரகலாதா சரித்திர நாடகத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்

மெலட்டூர்;

மெலட்டூரில் 500 ஆண்டு பழமையான பாகவத மேளா நாடக விழா பிரகலாதா சரித்திர நாடகத்துடன் தொடங்கியது.

பாகவத மேளா நாடக விழா

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்ற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்ற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா லட்சுமி நரசிம்மர் ஆலய வளாகத்தில் லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ளி திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

பிரகலாதா சரித்திரம்

தினமும் இரவு தொடங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடைபெறும். இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர். இந்த நாடக நடிகர்கள் தொழில்முறை நாடக கலைஞர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் தந்தை, மகன் என தொடர்ந்து நடித்து நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர். பாகவத மேளா நாடகவிழா பிரகலாதா சரித்திரம் என்ற நாட்டிய நாடகத்துடன் தொடங்கியது. விழா ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்க இயக்குனர் எஸ்.குமார் செய்திருந்தார்.


Next Story