மூதாட்டி சாவு
மூதாட்டி சாவு
தஞ்சையை அடுத்துள்ள மானோஜிப்பட்டி வனதுர்கா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மனைவி அமுதா (வயது60). இவரது மகன் சுரேஷ். நேற்று சுரேஷ் தனது மோட்டார்சைக்கிளில் தாயை அழைத்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருக்கானூர்பட்டியில் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுரேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த அமுதா சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுரேஷ் படுகாயமடைந்தார். தகவல் அறிந்ததும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த சுரேசை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தேடி வருகின்றனர்.