மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
முத்துப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் மோதி மூதாட்டி பலியானார்.
திருவாரூர்
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை தெற்குக்காடு பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை மனைவி ராமாமிர்தம் (வயது65).இவர் சம்பவத்தன்று பொருட்கள் வாங்க முத்துப்பேட்டை கடைத்தெருவிற்கு வந்துவிட்டு பின்னர் வீட்டுக்கு மன்னார்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், ராமாமிர்தம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராமாமிர்தம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பெருகவாழ்ந்தான் அடுத்த காந்தாரி கிராமத்தை சேர்ந்த விஜயராகவன் (45) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story