அரசு பள்ளி வளாகத்தில் முதியவர் பிணம்
பாலக்கோடு அரசு பள்ளி வளாகத்தில் முதியவர் பிணமாக கிடந்தார்.
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார், முதியவரின் பிணத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு ெசய்து இறந்து கிடந்த முதியவர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story