தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் இந்திராநகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 70). இவரது மனைவி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்ட நிலையில் உறவினர்கள் பராமரிப்பில் தங்கவேல் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் தங்கவேலுக்கு வயிற்றுவலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்தநிலையில் சம்பவத்தன்று உறவினர் ஒருவர் தங்கவேலுக்கு சாப்பாடு கொடுக்க சென்ற போது அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story