ஓடையில் முதியவர் பிணம்


ஓடையில் முதியவர் பிணம்
x

முக்கூடல் ஓடையில் முதியவர் பிணம் கிடந்தது. அவர் இறந்தது எப்படி? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் பெருமாள்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 84). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வராததால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே அவரது மகன், தனது தந்தையை காணவில்லை என்று முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் நேற்று பகலில் முக்கூடலில் இருந்து சடையப்புரம் செல்லும் வழியில் உள்ள ஓடைக்கு வட பகுதியில் அந்த வழியாக சென்ற நபர் திடீரென ஒரு பிணம் கிடப்பதை பார்த்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். முக்கூடல் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் செல்லையா என தெரியவந்தது. இது குறித்து முக்கூடல் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story