முதியவர் திடீர் சாவு


முதியவர் திடீர் சாவு
x

முதியவர் திடீரென இறந்தார்.

கரூர்

கரூர் சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 73). இவர் சம்பவத்தன்று வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியசாமி மகன் ராம்குமார் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story