முதியவர் திடீர் சாவு


முதியவர் திடீர் சாவு
x

சிவகாசியில் முதியவர் திடீரென இறந்தார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி ரிசர்வ்லைன் ஆறுமுகம் காலனியை சேர்ந்தவர் பிச்சை (வயது 72). தனியாக வசித்து வந்த இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்துவந்த நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உறவினர் ராதா கிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story