கார் மோதி முதியவர் சாவு
சேலம்
எடப்பாடி:-
எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் நேற்று முன்தினம் இரவு வெள்ளாண்டி வலசு பகுதியில் எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அவருடைய மகன் ஜெயின் பாலாஜி அளித்த புகாரின்பேரில் போலீசார் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த எடப்பாடி அடுத்த கள்ளுக்கடை நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story