திராவகம் குடித்த முதியவர் சாவு
திராவகம் குடித்த முதியவர் சாவு
கன்னியாகுமரி
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள கிள்ளியூர் நுள்ளி பகுதியை சேர்ந்தவர் பொன்னுமணி மகன் பொன்னையன் (வயது 70). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்றும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் திராவகத்தை குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைகண்ட குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பொன்னையன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story