ரெயில் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு
நாகூர் ரெயில் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு
நாகப்பட்டினம்
நாகூர் ரெயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார் முதியவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த முதியவர் திருச்சி பாலக்கரை சந்தைபேட்டையை சேர்ந்த அப்துல் ஹசன் (வயது 75) என்பது தெரிய வந்தது. எதற்காக அவர் நாகூர் ரெயில் நிலையம் வந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story