மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
தொண்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா நம்புதாளையை சேர்ந்தவர் பொன்னழகு (வயது 65). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தவர் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தொண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire