மினி லாரி மீது மொபட் மோதி முதியவர் பலி
சின்னசேலத்தில் மினி லாரி மீது மொபட் மோதி முதியவர் பலி
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்
சின்னசேலம் கீழ் வெற்றிலைகாரர் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பாலமணிகண்டன்(வயது 28). டிரைவரான இவர் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சியில் இருந்து மினி லாரியில் சின்னசேலம் நோக்கி சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். தனியார் ரைஸ் மில் அருகே வந்தபோது எதிரே சின்னசேலத்தை அடுத்த தென் செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(75) என்பவர் மொபட்டை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து மினி லாரியில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே லோகநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story