சேலத்தில் சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கி முதியவர் பலி
சேலத்தில் சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கி முதியவர் பலியானார்.
சேலம்
பள்ளப்பட்டி,
சேலத்தில் லீபஜார் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில் மழைநீர் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. அந்த தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு 70 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அவர் யார்? என அடையாளம் ஏதும் தெரியவில்லை. சுரங்கபாதையில் நடந்து சென்றபோது, தண்ணீரில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரை பற்றி தெரிந்தவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story