மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் சாவு
x

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியானார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி டூவிபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 63). சம்பத்தன்று இவர் புதுக்கோட்டை சிறிய பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது முன்னாள் நடந்து சென்ற ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்து உள்ளார். இதில் நிலை தடுமாறிய சுந்தர்ராஜ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story