நடிகர் தனுஷ் தனது மகன் என்று வழக்கு தொடர்ந்த முதியவர் கதிரேசனின் டி.என்.ஏ.வை சேகரித்து பாதுகாக்க வேண்டும் - மதுரை அரசு ஆஸ்பத்திரி டீனிடம் மனு


நடிகர் தனுஷ் தனது மகன் என்று வழக்கு தொடர்ந்த  முதியவர் கதிரேசனின் டி.என்.ஏ.வை  சேகரித்து பாதுகாக்க வேண்டும் - மதுரை அரசு ஆஸ்பத்திரி டீனிடம் மனு
x

நடிகர் தனுஷ் தனது மகன் என்று வழக்கு தொடர்ந்த முதியவர் கதிரேசனின் டி.என்.ஏ.வை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று மதுரை அரசு ஆஸ்பத்திரி டீனிடம் மனு அளிக்கப்பட்டது .

மதுரை


மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் (வயது 70), மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுசை தங்களுடைய மகன் எனக்கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது டி.என்.ஏ.வை (மரபணு) சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று அவரது மனைவி மீனாட்சி மற்றும் வக்கீல் டைட்டஸ் ஆகியோர் ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். பின்னர் வக்கீல் டைட்டஸ் நிருபர்களிடம் கூறும் போது, "முதியவர் கதிரேசனின் உடல்நிலை மோசமாக உள்ளது. தனுசை தனது வாரிசு என அவர் கூறுவது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கதிரேசன் டி.என்.ஏ.வை எடுத்து பராமரிக்க வேண்டும் என மனு அளித்து உள்ளோம். ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்து இருந்தார். பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தவறாக தாக்கல் செய்துள்ளார்.

எங்கள் தரப்பு மீது 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்வோம் என்று சொன்ன தனுஷ் இதுவரை வழக்கு தொடரவில்லை. தனுஷ் உண்மையை மறைக்க பார்க்கிறார். இது ஒரு கதிரேசனின் பிரச்சினை மட்டும் அல்ல. இப்படி எத்தனையோ பெற்றோர் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story