பஸ் மோதி முதியவர் பலி; டிரைவருக்கு ஓராண்டு சிறை


பஸ் மோதி முதியவர் பலி; டிரைவருக்கு ஓராண்டு சிறை
x

பஸ் மோதி முதியவர் பலியான வழக்கில் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து ஆலங்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

பஸ் மோதியது

ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூரை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை (வயது 65). இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆலங்குடி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக முத்துப்பிள்ளை மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஓராண்டு சிறை

இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான திருமயம் தாலுகா லெம்பலக்குடி அம்மிணிப்பட்டியை சேர்ந்த பஸ் டிரைவர் ரவியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆலங்குடி கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி விபத்தை ஏற்படுத்திய ரவிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story