கார் மோதி முதியவர் பலி


கார் மோதி முதியவர் பலி
x

கார் மோதி முதியவர் பலியானார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கோமான் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன்(வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் சுருதிமன்னன் (50). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி- சிதம்பரம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கருப்பையன் உயிரிழந்தார். சுருதிமன்னன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கரூர் மாவட்டம் வச்சேரி கிராமத்தை சேர்ந்த ஆசைத் தம்பி மகன் கிருபா(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story