சரக்கு ஆட்டோ மோதி முதியவர் பலி


சரக்கு ஆட்டோ மோதி முதியவர் பலி
x

வேலூரில் சரக்கு ஆட்டோ மோதி முதியவர் பலியானார்.

வேலூர்

வேலூர் கொணவட்டம் காந்திநகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 70). இவர் முள்ளிப்பாளையத்துக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கொணவட்டம் இ.பி.பஸ்நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக ஜெயராமன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவிக்கு பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story