டிராக்டர் மோதி முதியவர் பலி


டிராக்டர் மோதி முதியவர் பலி
x

டிராக்டர் மோதி முதியவர் பலியானார்.

திருச்சி

திருச்சி வயலூர்ரோடு குமரன்நகரை சேர்ந்தவர் தனபாலன் (வயது 63). இவரும் இவரது நண்பரான திருச்சி அரியமங்கலம் சீனிவாசநகரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற வையாபுரி ( 62) என்பவரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து விராலிமலைக்கு ஜாதகம் பார்ப்பதற்காக சென்று இருந்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று இரவு புறப்பட்டு திருச்சி நோக்கி அதே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தனபாலன் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்ல ரவிச்சந்திரன் பின்னால் அமர்ந்து சென்றார். அவர்கள்நேற்று இரவு 9 மணியளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே உள்ள ஆலம்பட்டி பிரிவு சாலையின் மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரை சேர்ந்த சுரேஷ் (36) என்பவர் ஓட்டி சென்ற டிராக்டர் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனபாலன் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சுரேசை கைது செய்தனர்.


Related Tags :
Next Story