வேன் மோதி முதியவர் பலி


வேன் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே வேன் மோதி முதியவர் பலியானார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தை சேர்ந்தவர் வேலுப்பிள்ளை (வயது 70). இவர் நேற்று காலை மேலக்கரந்தையில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வேன், வேலுப்பிள்ளை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்தும் வேலு பிள்ளையின் உடலை மாசார்பட்டி போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வேன் டிரைவர் கூட்டாம்புளியை சேர்ந்த கனி செல்வம் (37) என்பவர் எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் வேனுடன் சரணடைந்தார்.


Next Story