முதியவர் படுகாயம்


முதியவர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் பாலத்தில் தவறி விழுந்து முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் ஆத்துமேடு குடகனாறு பாலத்தில் 60 வயது முதியவர் ஒருவர் நேற்று மாலை நடந்து சென்றார். ஒரு கட்டத்தில், அவரால் நடக்க முடியாமல் பாலத்தின் தடுப்பு சுவர் அருகே அமர்ந்தார். திடீரென அவர், பாலத்தில் இருந்து தவறி சுமார் 10 அடி பள்ளத்தில் விழுந்து விட்டார். இதில் முதியவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.


இதனைக்கண்ட வேடசந்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுயநினைவை இழந்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story