தீக்குளித்து மூதாட்டி தற்கொலை


தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
x

தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ஊத்துப்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (வயது 60). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பேச்சியம்மாள் இறந்தார். இதுகுறித்து பேச்சியம்மாள் மகன் கார்த்திகை பெருமாள் (40) கொடுத்த புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story