தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
அருப்புக்கோட்டையில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உஜ்ஜிசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பொன்னாம்பிகை (வயது 71). இவர் கடந்த ஒரு வருடமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னாம்பிகை வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பொன்னாம்பிகை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் சுதா கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story